DISCLAIMER :
இந்த ப்ளாக் போஸ்டின் தலைப்பில் 'வெயில் காலம்' என்று போட்டிருந்தாலும், இது எழுதப்பட்டதென்னவோ செப்டம்பர் மாதத்தில்தான். இந்த மாதத்தில் சென்னையில் எந்த காலமென்று சத்தியமாக எனக்கு தெரியாது. ஒருவேளை உங்களுக்கு தெரிந்தால் கமென்ட்டில் குறிப்பிடவும்.
ஐ டி துறையில் போஸ்டிங் கிடைத்து, வேலையில் சேர்ந்த பின் ஒரு சில மாதங்கள் பெஞ்சில் இருப்பது ( அதாவது வெட்டியாக இருப்பதற்கு சம்பளம் வாங்குவது ) இப்பொழுதெல்லாம் சாதாரணம். ஆனால் வேலை கிடைத்து அதுக்கான டிரைநிங்கையும் முடித்து எந்த ஊர் ஆபிசுக்கு போய் பெஞ்சில் இருக்கப்போறோம்னு தெரிஞ்சுக்கவும் ஒரு சில வாரங்கள் பெஞ்சில் இருந்த சில பல 'அதிர்ஷ்டசாலி'களில் நானும் ஒருவன்.காலையில் லேட்டாக ஏந்திருத்தல், கிளாஸ் ரூம் போய் மெயில் செக் பண்ணுதல், மீண்டும் ரூமுக்கு வந்து டிவி பார்த்தல், மத்தியானம் முழுக்க தூங்குதல், இரவு புட் கோர்ட் போக சோம்பேறித்தனமாக இருந்தால் பிஸ்ஸா ஆர்டர் பண்ணுதல்.. இந்த கம்பனியை ஆரம்பித்த முதலாளி கூட இப்படி அனுபவிச்சிருப்பாராங்கறது டவுட்டுதான் !
இருந்தாலும் மனசுக்குள்ள ஒரு சின்ன குறுகுறுப்பு. இவ்வளவு வசதியும் செஞ்சு கொடுத்து, வெட்டியா உக்கந்திருக்கறதுக்கு சம்பளமும் தர்றாங்கலேன்னு; அதால, போஸ்டிங் இந்தியால எந்த மூலைக்கு போட்டாலும் சரி. குறை சொல்லாம போயிரலாம்னு முடிவு பண்ணுனேன். மத்தவங்கல்லாம் போஸ்டிங் இங்க கிடைக்கணும், அங்க கிடைக்கனும்னு கடவுள வேண்டிகிட்டு இருந்தத பாத்தப்பெல்லாம் சிரிப்பா வந்துச்சு. கடைசியா ரெண்டு வாரம் கழிச்சு அந்த நாளும் வந்துச்சு. அதிகாலை 10 மணிக்கெல்லாம் எழுந்திருச்சு, ரூமுல MTV AXE CLUB பாத்துகிட்டு இருந்தப்போ எல்லாரும் வெளிய பரபரப்பா 'போஸ்டிங் வந்திருச்சு! போஸ்டிங் வந்திருச்சு!' ன்னு ஓடிகிட்டு இருந்தாங்க. (எனக்கு எதோ சர்வர் ப்ராப்ளம்; அதால லேட்டா தான் வரும்னு சொல்லிட்டாங்க) போஸ்டிங் ஏதோ குலுக்கல் முறையில போட்ட மாதிரி இருந்தது. நெய்வேலிக்காரனுக்கு ஹைதராபாத் ! மதுரைக்காரனுக்கு திருவனந்தபுரம் !! பஞ்சாப்க்காரனுக்கு சென்னை !!!
கடைசியா மதியம் ஒரு மணிக்கு மேல எனக்கு போஸ்டிங் வந்தது. திறந்து பாத்தா எனக்கு பெரிய ஷாக் ! பெங்களுரு ! என் நண்பர்கள் வட்டத்துல எனக்கு மட்டும் தான் பெங்களுரு. போஸ்டிங் எங்க கெடைக்கும்னு இத்தனை நாளா யோசிக்கும் போது அஸ்ஸாம், அந்தமான் நிகோபர்னு எங்க ஆபிசே இல்லாத இடமெல்லாம் தோணுச்சே தவிர பெங்களுரு கெடைக்கும்னு நெனச்சு கூட பாக்கல ! ஒரு நிமிஷம் கை கால் ஓடல ! இதுக்கு சந்தோசப்படனுமா இல்ல வருதப்படனுமான்னும் புரியல ! பக்கத்துல இருந்த நண்பர்கள் கிட்ட விஷயத்த சொன்னேன். ஏற்கனவே ஏதோ நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எம்.எல்.ஏ களை வளைச்சு போடற அரசியல் கட்சி மாதிரி எல்லாரையும் சென்னைக்கு ஸ்வாப்(swap ~ transfer) பண்ண சொல்லிக்கிட்டு இருந்த என் நண்பர்கள் என்னையும் சென்னைக்கு வரச் சொன்னார்கள்.
சரி, பெங்களுரு செலக்ட் பண்ணி பப்புக்கு போய் தனியா தண்ணி அடிக்கறத விட, நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து மெரினா பீச்சுல சுண்டல் வாங்கி சாபிடுறது எவ்வளவோ பரவியில்லைன்னு நெனச்சு நானும் ஸ்வாப் கொடுத்தேன். அவனவன் ஸ்வாப் கொடுத்து 24 மணி நேரமா காத்திக்கிட்டு இருந்தாலும் எனக்கு கால் மணி நேரத்துலையே ஸ்வாப் ஆகி சென்னை கெடச்சிருச்சு. என் நண்பர்களும் நான் ஏதோ பெரிய ஓட்ட பந்தயத்துல ஜெயித்த மாதிரி ஹை பை எல்லாம் கொடுத்தாங்க .
மைசூர்ல கடைசி நாள்..சென்னை கெடச்சவனல்லாம் வேற ஊருக்கும், வேற ஊர் கெடச்சவனல்லாம் சென்னைக்கும் ஸ்வாப் அப்ளை பண்ணி, அதுல பாதி பேருக்கு கெடச்சு பாதி பேருக்கு கெடைக்காம, பாதி சந்தோசமா பாதி துக்கமா எல்லாரும் பேக் பண்ண ஆரம்பிச்சோம். யார் யாரை பாத்தாலும் கேக்கற கேள்வி ஒன்னே ஒன்னுதான். "ஸ்வாப்க்கு முன்னாடி போஸ்டிங் எங்க? பின்னாடி எங்க ?" இந்த இடைப்பட்ட நேரத்துல என் பேரு எப்படியோ எங்க பேட்சுல ரொம்ப பாபுலர் ஆயிருச்சு. ஹாரி பாட்டர பாத்து எல்லாரும் ‘The Boy Who Lived’ன்னு சொன்ன மாதிரி, எல்லாரும் என்னை பத்தியும் ‘The Boy Who Swapped from Bangalore to Chennai!‘ன்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க. நானும் ரொம்ப பெருமையா யார் கேட்டாலும், 'ஆமா, பிரண்ட்ஸ் கூப்டாங்க ! அதான் ஸ்வாப் பண்ணிட்டேன் !'ன்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சேன்.
இதுக்கு முன்னாடி சென்னைக்கு சில தடவைதான் வந்திருக்கேன். எனக்கு சென்னை பத்தி ஞாபகம் இருந்தது எல்லாம் இதுதான்: எப்பவோ பத்து வருசத்துக்கு முன்னாடி தாம்பரத்துக்கும் கிரோம்பேட்டைக்கும் நடுவுல இருந்த சொந்தகாரங்க வீடு, அந்த வீட்டுல குட்டி முதலை சைசுல இருந்த பல்லி, பாரிமுனைல இறங்கி டவுன் பஸ்ல போன சென்னை பல்கலைக்கழகம், முன்னாடி சென்னைல மெரினா பீச்சுக்கு அடுத்தபடியா பேமஸா இருந்து இப்போ ECR ரோட்டுல இருக்கற ஐடி கம்பனிகளுக்கு நடுல கொஞ்சம் கொஞ்சமா தொலஞ்சு போய்கிட்டிருக்கற MGM, VGP கோல்டன் பீச், etc.,. இத்தனைய ஞாபகம் வச்சிருக்கற நான் சென்னையோட வெயில மட்டும் ஞாகபம் வச்சுக்கல. ஞாபகம் வச்சுக்கலன்னு சொல்றத விட சட்ட பண்ணிக்காம விட்டுட்டேன்னுதான் சொல்லணும். சேலத்துலயும் நாமக்கல்லயும் யும்ன் பாக்காத வெயிலான்னு அசால்ட்டா விட்டுட்டேன்.
முதல் நாள் அதிகாலை கோயம்புத்தூரிலிருந்து ரயிலில் வந்து இறங்கி, சென்ட்ரல்ல ஒரு டாக்ஸி புடிச்சி ஆபிசுக்கு வந்து சேர்ந்தோம். என் ஞாபகத்தில் தாம்பரத்திலிருந்து ஒரு மணி நேர பஸ் பயணத்தில் வரும் சென்னை, இப்போது செங்கல்பட்டு வரை நீண்டிருந்தது. முதல் மூன்று நாட்கள் ஏசி ரூமிலேயே இருந்துவிட்டு, வாரக்கடைசியில் வீடு தேடி வெளியே அலையும் போதுதான் சென்னை வெயில் என்றால் என்னனு உறைத்தது. நம் உடம்பில் ரத்தத்திற்கு சரி சமமாக வியர்வையும் உள்ளதோன்னு சந்தேகமும் வந்தது.
மதியம் வருவர்தற்குள்ளேயே வீடும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம், மீண்டும் ரூமுக்கே போயிறலாம் என்கிற முடிவுக்கு வந்து விட்டேன். பெரியவங்க ஆத்திரத அடக்குனாலும், இன்னோன்ன அடக்க முடியாதுன்னு சொல்லியிருக்காங்க; அந்த வரிசையில இந்த சென்னை வெயிலையும் சேத்துக்கலாம். ஏன்னா அன்னைக்கு நான் அந்த மாதிரிதான் ரூமுக்கு ஓடுனேன். அன்னைக்கு ரூமுக்கு வந்ததும், இன்னொரு உலக மகா யுத்தம் செய்யாமல் யார் முதலில் குளிப்பதென நானும் என் நண்பனும் எப்படி முடிவு செஞ்சோம்னு இன்னைக்கும் ஆச்சர்யமா இருக்கு. கோயம்புத்தூரில் தினமும் பத்து நிமிடம் குளிக்கவே சோம்பேறித்தனமாக இருக்கும் நான், அன்று ஒரு அரை மணி நேரம் குளித்திருப்பேன். ஷவரை திறந்து விட்டு அரை மணி நேரம் யோசித்ததின் விளைவுதான் இந்த பிளாக் போஸ்ட்.
இனி வாழ்நாளில் இந்த வெயிலை எப்படி சமாளிக்க போறோம்னு யோசிச்ச போது சில எதுக்கும் உதவாத, ஆனால் வேடிக்கையான யோசனைகள் தோன்றின.அவற்றில் சில..
இனிமேல் கட்டிலில் மெத்தையை எடுத்து விட்டு, தண்ணீரால் நிரப்பி விடுவது; அதாவது வாட்டர் பெட் மாதிரி இது பாத் டப் பெட்!
வீட்டின் எல்லா அறைகளிலும் மின் விசிறிக்கு பதிலா, தோட்டத்தில் பயன்படுத்தும் ஸ்ப்ரின்க்லர்சை மாட்டி விடுவது !
சிவன் கோவில்களில், சிவலிங்கத்துக்கு மேலே சொம்பில் சின்னதா ஓட்டை போட்டு தண்ணீர் சொட்டுவதை போல இருக்கும் அதே மெக்கானிசம் உள்ள தொப்பியை பயன்படுத்துவது !
மருத்துவமனையில் குளுகோஸ் பாட்டில் தொங்கவிடும் கம்பியில் ஒரு வாட்டர் பாக்கெட்டையும், ஷவரையும் பிக்ஸ் பண்ணி - மொபைல் ஷவர் !
அப்புறம், அனுஷ்கா ஷர்மா அடிக்கடி டிவில வந்து ஒரு நாப்கின்ல முகத்த தொடச்சா ஒரு வாட்டர் பலூன முகத்துல உடைச்ச எபக்ட் வரதா சொல்றாங்க. ஆனா இது எந்த அளவுக்கு உண்மைன்னு எனக்கு தெரியல.
சட்டையில உள்பாக்கெட்டுக்கு பதிலா, சின்னதா பேட்டரில ஓடுற மாதிரி ஒரு ஏசி கண்டுபிடிச்சு பிக்ஸ் பண்ணிரலாம். ஏன்னா, சிவாஜில ரஜினி போடற மாதிரி பெரிய ஏசி டிரஸ் எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது.
இப்ப வந்திருக்க புது டைப்பான 'வெதர் கோட்' பெயிண்ட்ட வீட்டுக்கு வெளிய அடிக்கறதுக்கு பதிலா, வீட்டுக்கு உள்ள அடிச்சரலாம். இதனால, எப்பவாச்சும் மழை பெஞ்சுதுனா, இல்ல நாமளே வீட்டு மேல தண்ணி ஊத்துனாலும், தண்ணி வீட்டுகுள்ளேயே இருக்கும், உள்ளேயும் சொட்டது ! குறைந்த விலையில் ஏசி !
இந்த வெயிலால் சில நல்ல விஷயங்களும் ஏற்பட்டது !
ரெண்டாயிரம் ரூபாய்க்கு வாங்குன ஸ்வெட்(வியர்வை) ரெஸிஸஂடன்ட் இயர் போன்ஸஂக்கு கடைசியா வேலை வந்தது !
கோயம்புத்தூர்ல ஒரு தடவை குளிக்கவே முக்கி முனகிட்டு இருந்த நான்,இப்போ 'பாபா' டெல்லி கணேஷ் மாதிரி ஒரு நாளைக்கு நாலு தடவ குளிக்கறேன்.(அட் லீஸ்ட் முதல் ஒரு மாசத்துலயாவது அப்படி குளிச்சேன். )
சில பேர் சொல்லலாம்; இதெல்லாம் ஒரு வெயிலா ! மே மாச கத்திரி வெயில இவன் பாக்கணும் ! இவனையெல்லாம் கொண்டுபோய் சஹாரா இல்ல தார் பாலைவனத்துல தள்ளனும் ! அப்ப தெரியும்னு.. மன்னிச்சிக்குங்க தோழர்களே ! கடந்த நாலு வருஷமா நான் தினமும் காலைல எந்திருச்சு காலேஜுக்கு போகும் போது கடவுள வேண்டிக்கிட்டு போகுறது இதுதான் ! 'கடவுளே ! இந்த சனியன் புடிச்ச மழை இன்னைக்கும் வந்து என் யூனிபார்ம நனைச்சிர கூடாது !' இப்படி வேண்டிகிட்டதுக்கு தண்டனையாதான் என்ன கடவுள் இங்க தள்ளிட்டார் போலிருக்கு !
கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் துறக்க முடிவு செஞ்சபோது, அவர் தோழர் பிசிராந்தைய்யரும் அவரை போலவே வடக்கிருந்து உயிர் விட்டாராம். அதே மாதிரி என் நண்பர்கள் மட்டும் இங்க இருந்து அவஸ்தை பட்டா பத்தாதுன்னு நானும் இங்கே தெற்கே வந்து என் உயிரையும் விட்டு மத்தவங்க உயிரையும் எடுத்துகிட்டு இருக்கேன். இனிமே நட்புக்கு உதாரணமா என் பெயரையும் இந்த உலகம் சொல்லட்டும் !
பின்குறிப்பு:
இந்த ப்ளாக் போஸ்ட் எழுத ஆரம்பிச்ச ஒரு வாரத்துலையே இங்க பயங்கரமா மழை பெய்ஞ்சு, நாங்க வாடகைக்கு எடுத்த வீடு ஒரு தீவு மாதிரி மாறிப்போய், வானத்துல நட்சத்திரங்கள் அதிகமா இல்ல இந்த வீட்டுல தவளைகள் அதிகமான்னு நான் இன்னொரு ப்ளாக் போஸ்ட் எழுத நெனச்சது தனி கதை !
பின்பின்குறிப்பு:
இது எனக்கு மட்டும் தோணுனது தான். இதனால யாரும் இங்க வராதிங்க, எல்லாரும் ஓடி போயிருங்கன்னு நான் சொல்ல வரல.உண்மையிலே சென்னை ஒரு ரொம்ப நல்ல ஊர் ! வந்தாரை வாழ வைக்கும் நகரம்! ( அது வரைக்கும் நீங்க உயிரோட இருந்தா ! சாரி.. பழக்கதோஷம்.. மன்னிச்சு !!)