நீங்கள் ஒரு விக்ரம் ரசிகரா ? இளைய தளபதி விஜய் போல விக்ரம் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை அந்தரத்தில் ஏன் பைட் பண்ணுவதில்லை என்று வருத்தபடுபவரா ? இல்ல தல அஜித் போல ஹீரோயின்ஸ வெளிநாட்டு டூயட் சான்குக்கும் வில்லன்கள் கடத்துறதுக்கு மட்டும் ஏன் யூஸ் பண்றதில்லைன்னு பீல் பண்றவரா ? இல்ல சூப்பர் ஸ்டார் ரஜினி போல 'கண்ணா !' ன்னு ஆரம்பிக்கற பஞ்ச் டயலாக் ஏன் சொல்றதில்லைன்னு புலம்பரவரா ? இல்ல உலக நாயகன் கமல் மாதிரி ஒரே படத்துல ஏன் பத்து கெட்டப் போடறதில்லைன்னு யோசிச்சிட்டு இருக்கறவரா ? அதுவும் இல்லேன்னா சிம்பு, தனுஷ் மாதிரி மட்டமான லிரிக்ஸோட ஒரு பாட்டை ஏன் விக்ரமே பாடலன்னு நெனக்கறவரா ? கவலை வேண்டாம் !! இதோ உங்களுக்காக ஒரு படம் !! ராஜபாட்டை !!
முதல்ல படத்து டைட்டில்ல இருந்து ஆரம்பிப்போம் ! ராஜபாட்டை !! கேக்க நல்லாத்தான் இருக்கு. ஆனா இந்த படத்துக்கு ஏன் இந்த பேர வச்சாங்கன்னு இப்ப வரைக்கும் எனக்கு புரியல ! ஒரு வேளை இந்த படம் ரோடு போடறதுல நடக்குற ஊழல் பத்தியோ இல்லேன்னா ஹீரோ இந்த படத்துல ஒரு ரோடு காண்ட்ரேக்டராவோ இருந்தா ஒத்துக்கலாம். அட அட் லீஸ்ட் படத்துல ' எப்பவுமே என் வழி தனி வழி' ஸ்டைல்ல 'எப்பவுமே நான் போற பாதை ராஜபாட்டை !' ன்னு ஒரு பன்ச் டயலாக் இருந்திருந்தா கூட பரவாயில்ல.. அதுவும் இல்ல ! அப்புறம் ஏன் இந்த படத்துக்கு ராஜபாட்டை ன்னு பேரு ?! ஒரு வேளை நேஷனல் ஹைவே ஓரத்துல நடக்குற நில அபகரிப்பு (land mafia) பத்தின படம்னா ? இருக்கலாம் !
அடுத்து ஹீரோ என்ட்ரி ! முதல்ல ரவுடிஸ் அட்டகாசமெல்லாம் காட்டிட்டு, கடைசியா ஒரு தாத்தா 'இதெல்லாம் தட்டி கேக்க சாமிதான் வரணும்'ன்னு சொல்றப்ப விக்ரம் என்ட்ரி ! அப்படியே கோயில் முன்னாடி அய்யனார் மாதிரி ஒரு பெரிய அருவாள கையில வச்சுட்டு மூணு லாங்க்வேஜ்ல பஞ்ச் டயலாக் பேசறார் ! கொஞ்சம் ஓவரா டயலாக் பேசறப்பவே லைட்டா இதுல ஏதாவது உள்குத்து இருக்குமோன்னு டவுட்டு வர ஆரம்பிச்சுது ! அதே மாதிரி இதெல்லாம் கனவுன்னு ஆயிருது ! இப்பெல்லாம் படத்துல எந்த ட்விஸ்டும் இல்லாம இருக்கறதுதான் பெரிய ட்விஸ்ட் ங்கற நெலைமை வந்துருச்சு !
அடுத்து ஹீரோ இன்ட்ரோடக்ஸன் சாங் ! இப்படி ஒரு விஷயம் படத்துல இல்லைன்னு தெரிஞ்சதும்தான் மனசுக்கு எவ்வளோ பெரிய நிம்மதி !! அடுத்து ஹீரோயின பாத்ததும் வர டூயட் சாங்கயும் 'ஆணியே புடுங்க வேணாம்'னு கேன்சல் பண்ணுனதும் ' சபாஷ் சுசிந்தரன் !' ன்னு சொல்லனும்னு தோணுச்சு. ஆனா உலகத்துலையே முதல் முறையா கிளைமாக்ஸ்க்கு அப்புறமா 'ரெண்டு லட்டு' ஐடம் சாங்க வச்சதும் 'பெரியப்பா ! நம்மள ஏமாத்திபுட்டாங்க பெரியப்பா !'ன்னு 'கண்டேன் காதலை' சந்தானம் மாதிரி அழ வேண்டியதா போச்சு. (ஏன்னா படத்துக்கு அம்மா கூட போயிருந்தேன். கிளைமாக்ஸ் முடிஞ்ச உடனே கூட கிளம்பி போக வேண்டிய கட்டாயம். நீங்க முன்னாடி போங்க, நான் ஸ்ரேயாவ பாத்துட்டு வரேன்னு சொல்ல முடியாதுல்ல..)
படத்துல கண்டிப்பா குறிப்பிட வேண்டிய கேரக்டர் ஒன்னு இருக்குன்னா அது கே. விஸ்வநாத் தான். படத்துல மத்த சீன் மாதிரியே இவர் சீன் ஒப்பனிங்கும் ரவுடிஸ் கூடத்தான். இவருக்கு ஒரு பிளாஷ்பேக்குன்னு ஆரம்பிச்சதும், போச்சுடா இனிமே செண்டிமெண்டா போட்டு புழிய போறங்கன்னு நெனச்சேன். ஆனா அவர் என்னடான்னா வெள்ளகாரன்கிட்ட சுதந்திரம் வாங்கறதுக்கு முன்னாடி எப்படி ஒரு வெள்ளகாரிய கரெக்ட் பண்ணுனாருன்னு ஆரம்பிச்சு, அம்மா கூட போற பொண்ண எப்படி சைட் அடிக்கறது, பொண்ண எப்படி ப்ரொபோஸ் பண்றதுன்னு ஐடியா மேல ஐடியாவா கொடுத்து நமக்கு இப்படி ஒரு காட்பாதர் இல்லாம போயிட்டரேன்னு பீல் பண்ண வச்சுட்டாரு.
படத்துல வேற முக்கியமான கேரக்டர்னா படத்தோட வில்லி 'அக்கா'வ சொல்லலாம். ஏதோ அக்கான்னு பேர் வச்சதால சொர்ணாக்கா மாதிரி தொண்டை கிழிய கத்தி நம்ம காத கிழிய வைக்கல. ஏதோ ஒரு மெகா சீரியல்ல வர்ற சைலன்ட் வில்லி மாமியார் மாதிரி கண்ண மட்டும் உருட்டி உருட்டி பயமுறுத்தறாங்க.
சரி படத்துல முக்கியமான எல்லாருக்கும் புடிச்ச முக்கியமான விஷயத்துக்கு வருவோம். ஹீரோயின்ஸ் !! தீக்ஸா ஷேத் ! சும்மா சொல்ல கூடாது ! சின்னதா ஒரு மூக்குத்தியோட படம் முழுக்க சிரிச்சிக்கிட்டே அழகா இருக்காங்க ! பாவம் கொஞ்சம் கொஞ்சம் டமில் மட்டுமே தெரிஞ்ச ஹீரோயின்கிட்ட இதவிட அதிகமா எதிர்பாக்கறது ரொம்ப அநியாயம் ! அப்புறம் 'வில்லாதி வில்லன்களும்' பாட்டுல வர்ற சலோனி ! 'மரியாத ராமண்ணா' (தெலுங்கு) பாத்து சலோனி பேன் ஆன நான் இனிமே அந்த போஸ்ட்ட ராஜினாமா பண்ணிரலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன். அடுத்து ஷ்ரேயா அண்ட் ரீமா சென் ! சொல்றதுக்கு ஒண்ணுமே இல்ல.. படம் பாக்க வந்தவங்க எல்லாரும் க்ரெடிட்ஸ் முடியற வரைக்கும் போக கூடாதுன்னு எல்லா டைரக்டரும் என்னனம்மோ ட்ரை பண்றாங்க.. ஆனா யாருக்கும் இப்படி ஒரு கெஸ்ட் அப்பியரன்ஸ் ஐடம் சாங்க கிளைமேசுக்கு அப்புறம் வைக்கணும்னு தோணுனது இல்ல !!
பாட்டெல்லாம் கேக்க ரொம்ப நல்லா இருக்கு. ஆனா தியேட்டர்ல பாக்கறப்போ கொட்டாவி வர்றத தடுக்க முடியல !
படத்துல எனக்கு புடிச்ச ரெண்டே விஷயம் ! ஹீரோவுக்கு நெருக்கமா இருக்கறவங்கள கொல்றதுக்கு எவ்வளவோ சான்ஸ் கெடைச்சும் அந்த மாதிரி எதுவும் கடைசி வரைக்கும் நடக்கல ! இதுல வர்ற வில்லன்களெல்லாம் ரொம்ப நல்லவங்களா இருக்காங்க ! அடுத்த விஷயம் கிளைமாக்ஸ் கோர்ட்லன்னதும் வில்லி குரூப் அங்கிருந்து தப்பிச்சு போக ட்ரை பண்ணி, அதுக்கு ஹீரோ பதினஞ்சு நிமிஷமா ஒரு கார் சேசிங் பண்ணி கடசீல பென்னி மில்ஸ்ல கொண்டு போய் நிறுத்தாம, சீன கோர்ட்லயே முடிச்சதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் !
சரி கடசீல நான் என்னதான் சொல்ல வரேன் ? இந்த படத்த பாக்கலாமா வேணாமா ? இப்படியெல்லாம் கேள்வி கேட்கபடாது. அதெல்லாம் நீங்கதான் முடிவு பண்ணனும். உங்களுக்காக நான் முடிவு பண்ண முடியாது. என்ன பொருத்தவரைக்கும் நான் இந்த படத்த பாத்து ரொம்ப என்ஜாய் பண்ணுனேன். ரெண்டு மாசம் கழிச்சு ப்ளாக் எழுதறேன்னா என்னை எவ்வளோ இன்ஸ்பைர் (inspire) பண்ணிருக்குன்னு பாத்துகோங்களேன் !
இப்ப ரீசன்ட்டா படத்த பத்தி தெரிஞ்சுகிட்ட சில டிட் பிட்ஸ்:
- இந்த படத்துல விக்ரம் மொத்தம் 17 கெட்டப்புல வர்றாராம். இத கின்னஸ்ல கொண்டு வர்ற முடியுமான்னு யோசிச்சிட்டு இருக்காங்களாம்.
- படம் பாதி எடுக்கும் போதே சுசிந்த்ரனும் விக்ரமும் சேந்து இன்னொரு படம் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டாங்களாம். ப்ரோடியுசர், கதை எல்லாம் ரெடி. ஷூட்டிங் எப்ப ஆரம்பிக்க போகுதுன்னு தெரியல.